இறந்த பின்னும் 7 பேருக்கு மறுபிறவி கொடுத்த பெண்..மனதை கரைய வைக்கும் சம்பவம் | Thiruvallur
கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்த கீர்த்தி, சென்னையில் தங்கி கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். கடந்த 3-ம் தேதி, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது விபத்தில் சிக்கினார். இதில்தலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் சம்மதத்துடன் அவரது இதயம், கல்லீரல் உட்பட 7 உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.