ரம்மதேசம் என்ற பகுதியில் பிரசித்தி பெற்ற நாலாயிரத்து அம்மன் கோவிலில், மண்டல பூஜை நடந்து முடிந்தது. இந்த கோவிலில்,
அலங்காரத்திற்காக அம்மனின் மீது சுமார் 12 பவுன் நகை சாத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மர்ம கும்பல் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உண்டியலில் பணம் இல்லாததால் அம்மன் மீது இருந்த 12 பவுன் நகையை திருடி சென்றனர். இதன் மதிப்பு 5 லட்சம் ஆகும். இது குறித்து அம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கை ரேகை நிபுணர்களும் தடயங்களை தேடி ஆய்வு செய்து வருகின்றனர்.