கேள்வி கேட்ட பொதுமக்கள்.. நைசாக நழுவிய ஊராட்சி மன்ற தலைவர்... கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு
ஆலப்பாக்கம் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாதியிலேயே கூட்டம் நிறுத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள வேண்பாக்கம் பகுதியில் கிராம் சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் இலவசமாக குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் பணம் பெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா பதில் அளிக்காமல் அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி திருமலை பதில் அளித்தார்.
இதனால் தலைவரை பதில் சொல்ல விடுங்கள் என அதிமுகவினர் பொதுமக்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாதியிலேயே கூட்டம் நிறுத்தப்பட்டது.