கடமையை செய்யாத காவலர்..! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-07-28 02:17 GMT

கடந்த 2021-ல் இருசக்கரவாகனத்தை காணவில்லை என திருமங்கலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், வழக்கு பதியக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வாகனத்தை திருடியவர்களை கைது செய்ய வேண்டும், காப்பீடுத் தொகை கிடைக்க ஏதுவாக "வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை" என சான்றிதழ் வழங்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, கடந்த ஆண்டு பிப்ரவரியில் 4 வார கால அவகாசம் வழங்கினார். ஆனால் அந்த உத்தரவை உரிய காலத்தில் ஆய்வாளர் நிறைவேற்றாததால், கடமையை செய்ய தவறியதாக அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.

Tags:    

மேலும் செய்திகள்