திருமணமான 3-ஆவது நாளில் படுக்கை அறையிலே முடிந்த புது மாப்பிள்ளையின் வாழ்க்கை

Update: 2023-09-25 02:51 GMT

செங்கல்பட்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கொலை வழக்காக மாற்றக்கோரி உறவினர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திம்மாவரத்தைச் சேர்ந்த சுவேதா என்பவருக்கும், ராணிப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்த நிலையில், திருமணமான மூன்றாவது நாளே மாமனார் வீட்டு படுக்கையறையில் சரவணன் தூக்கில் சடலமாகத் தொங்கினார். அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள், செங்கல்பட்டு காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆய்வாளர் புகழேந்தி உறுதியளித்ததின்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்