பூதாகரமான ஸ்ரீரங்கம் விவகாரம்.. ஐயப்ப பக்தர்கள் மீது பாய்ந்த வழக்கு

Update: 2023-12-13 07:11 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்களுக்கும், கோவில் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரத்தில், ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மூவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் காவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஐயப்ப பக்தர்கள் கொடுத்த புகாரின் பேரில், கோவில் காவலர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர். அவர்கள் 3 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்