தமிழகம், கர்நாடகாவை நடுங்க வைத்த சம்பவம் - கருகி பலியான 7பேர்.. கதறி அழுத உறவினர்கள்
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி. அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த 10 இளைஞர்கள், தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் வேலை செய்தபோது தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர்.இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து ஏழு பேரின் சடலங்கள் ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த ஊரான டி. அம்மாபேட்டை கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, கிராம மக்கள் திடீரென வாகனத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.