திரும்பும் `ஜல்லிக்கட்டு' வரலாறு.. ஆளுநர் செயலுக்கு முடிவுகட்ட தமிழக அரசு அதிரடி முடிவு
2011ஆம் ஆண்டு முதல் பல்வேறு விவகாரங்களுக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளது
கடந்த 2011ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2013ல் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளை புறக்கணிப்பது தொடர்பாக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது
2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு அவசர சட்டம் இயற்றப்பட்டது.
2018ம் ஆண்டில் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அவசர கூட்டம் கூடியது.
2022ஆம் ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி அவசர சட்டப்பேரவை கூட்டம் கூடியது.
இந்த சூழலில், வரும் 18ம் தேதி தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்டமசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைப்பதற்காக சட்டமன்றம் கூட உள்ளது.