நோயாளிகளுக்கு ஊசி போட்ட காவலாளி... சுகாதாரத்துறை அதிரடி ஆக்ஷன்| Viluppuram
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகளுக்கு ஊசி போட்ட தற்காலிக காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தற்காலிக இரவு நேர காவலராக பணியாற்றி வந்த தேவேந்திரன் என்பவர் அங்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வந்தது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தேவேந்திரன் பணி நீக்கம் செய்யப்பட்டார். தேவேந்திரனுக்கு நிரந்தர பணி ஆணை வழங்குவதாக இருந்த நிலையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது