ரூ.800 வட்டிக்காக திட்டித்தீர்த்த பைனான்சியர் - அவமானத்தால் உயிரையே விட்ட நபர்

Update: 2023-08-08 14:39 GMT

அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் அரூரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் நல்ல தம்பி என்பவரிடம், கடந்த 2022 ஆம் ஆண்டு 3 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. அசல் பணம் 3 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்த சங்கர், அதற்கான வட்டிப்பணம் 800 ரூபாயை செலுத்த தவறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நல்லதம்பி, சங்கரை குடும்பத்தினர் முன்னிலையில் தகாத வார்த்தைகள் கூறி திட்டியிருக்கிறார். தந்தையை பைனான்சியர் திட்டியதால் மன வேதனையடைந்த சங்கரின் மகன், வட்டிப்பணம் 800 ரூபாயை தயார் செய்து நல்லதம்பியிடம் கொடுத்து விட்டு வந்தபோது, வீட்டினுள் தந்தை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சங்கரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்த ஆரம்பித்தனர். இதனிடையே, சங்கரின் உறவினர்கள் ஆருர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, பைனாசியர் நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்க கூறி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்