- ஸ்ரீவில்லிபுத்தூர், நெல்லை, வேலூர், தென்காசி உள்ளிட்ட இடங்களில் மித முதல் கனமழை பெய்தது.
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. கிருஷ்ணன் கோவில், மல்லி, வன்னியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் மழை வெளுத்து வாங்கியது.
- நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- வேலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் அரைமணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
- தென்காசி மாவட்டம் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. தேவிபட்டிணம், ராயகிரி, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. இதனால், தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.