நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை

Update: 2023-10-11 02:40 GMT

திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், நெடுஞ்சாலை துறை பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இதன் பேரில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அந்த அலுவலகத்தில் அதிரடியாக அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலக கண்காணிப்பாளர் மருதநாயகத்திடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்