ஆலை வெடி விபத்தில் உயரும் பலி எண்ணிக்கை.. வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-07-13 15:08 GMT

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. காளையார்குறிச்சியில், கடந்த 9-ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா மற்றும் சங்கரவேல் ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்