தமிழகத்தில் காட்டிய அறிகுறி - "வயநாட்டை போல நடந்து விடுமோ?" அஞ்சி நடுங்கும் மக்கள்

Update: 2024-08-04 04:36 GMT

தமிழகத்தில் காட்டிய அறிகுறி - "வயநாட்டை போல நடந்து விடுமோ?" அஞ்சி நடுங்கும் மக்கள்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கோக்கால் மலை பாங்கான பகுதியில் பத்துக்கு மேற்பட்ட வீடுகள், சுவர்கள், தரைகள் விரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விரிசல் பெரிய அளவாக மாறி, சாலைகள், கட்ட‌டங்களில் பிளவுகள் ஏற்பட்டு வருகிறது. முதியோர் காப்பக கட்ட‌டம் 7 அடிக்கு புதைந்துள்ளது. இதனால், வயநாட்டில் ஏற்பட்டது போன்று நடக்குமோ என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்களின் அறிவுறுத்தல்படி, அந்த பகுதியை சுற்றியுள்ள மக்கள் முகாமுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருப்பமில்லாதவர்கள், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில், கோட்டாட்சியர் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளரை தொடர்புகொண்டு தகவல் அளிக்கலாம் என்று தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்