"இதுதான்டா... பைனல்ஸ்" அசத்தலான இறுதி போட்டி - TNPL - ராகுல் டிராவிட் கொடுத்த முக்கிய Update

Update: 2024-08-04 05:20 GMT

"இதுதான்டா... பைனல்ஸ்" அசத்தலான இறுதி போட்டி - TNPL - ராகுல் டிராவிட் கொடுத்த முக்கிய Update

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்க உள்ளது. ஷாருக் கான் தலைமையிலான கோவை அணி முதலாவது குவாலிஃபயரில் திருப்பூரை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி, எலிமினேட்டரில் சேப்பாக்கையும் 2வது குவாலிஃபயரில் திருப்பூரையும் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. சாய் சுதர்சன், சித்தார்த், ஜாதவேத் உள்ளிட்டோர் அடங்கிய கோவை அணி ஹாட்ரிக் பட்டம் வெல்ல முனைப்பு காட்டக் கூடும். பாபா இந்திரஜித், ஷிவம் சிங், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய திண்டுக்கல் அணி முதல் பட்டத்தை வெல்ல தீவிரம் காட்டக் கூடும் என்பதால் இறுதிப்போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இறுதிப்போட்டியை இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேரில் காணவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்