காவல்துறை அதிகாரிகள் பணி ஓய்வு பெறும் நாளன்று பணியிடை நீக்கம் செய்யப்படுவது அரசியல் காழ்புணர்ச்சியால் எடுக்கப்படும் நடவடிக்கை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளனார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதை, எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக தெரிவித்தார். டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இன்று வெளியாகும் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியினர் பங்கேற்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளதாகவும், 543 தொகுதிகளும் எந்த பக்கம் செல்லும் என்பது இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.