திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள், பெண்கள் என ஏராளமானோர் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி, கடந்த ஒராண்டாக பல்வேறு போராட்டங்களில் 11 கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 367-வது நாளான இன்று, தமிழக அரசை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.