19 வயது சித்தாளை கர்ப்பமாக்கிய மேஸ்திரி.. 5 மாத கர்ப்பத்தில் அவிழ்ந்த உண்மை
தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவர் கட்டட கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார்... அதே பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி மகாலிங்கம் கடந்த மார்ச் மாதம் கதிரம்பட்டி பகுதியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த போது இளம்பெண்ணைக் கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டுள்ளார்... இதனால் இளம்பெண் இப்போது 5 மாதங்கள் கர்ப்பமாக உள்ள நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.. போலீசார் தலைமறைவாக இருந்த மகாலிங்கத்தைத் தேடி வந்த நிலையில்...தற்போது அவர் கைதாகியுள்ளார். விசாரணையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மகாலிங்கம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.