மீரட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாகியுள்ளார் ஒரு நபர்... தான் வங்கியில் வேலை செய்வதாகவும், அப்பெண்ணுக்கு வங்கியில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்... அந்த நபர் தனது நண்பரை அனுப்பி வேலைக்காக அவருடன் அப்பெண்ணை டேராடூன் வருமாறு கூறியுள்ளார்... ஆனால் அங்கு அப்பெண் தனது இன்ஸ்டாகிராம் நண்பரை சந்திக்கவில்லை... உடன் வந்த நபர் அப்பெண்ணை ஷாம்லி மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்... அங்கு தனது இன்ஸ்டாகிராம் நண்பரை அப்பெண் சந்தித்தார். அப்போது அப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து விடுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.