சாதித்து காட்டிய விவசாயி மகள்கள் - தமிழ்நாடே திரும்பி பார்க்கவைத்த திருப்பூர் பெண்கள்

Update: 2024-04-27 09:34 GMT

சாதித்து காட்டிய விவசாயி மகள்கள் - தமிழ்நாடே திரும்பி பார்க்கவைத்த திருப்பூர் பெண்கள்

ஈரோடு சின்ன செட்டிபாளையத்தை சேர்ந்த விவசாயி காளியப்ப சாமி - உமா மகேஸ்வரி மகளான 26 வயது சுபாஷினி, திருப்பூர் கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார். மேலும், விவசாயி பழனிசாமி - பழனியம்மாள் மகளான ஈரோடு துடுப்பதி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது நித்யா, அரசு வேலை கிடைத்து விட்டது என தேங்கி விடாமல் தொடர்ந்து படித்து வேளாண்மை அலுவலராக குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய நிலையில், இன்று அதையும் கடந்து குரூப் 1 தேர்வில் வென்று உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் உடுமலையைச் சேர்ந்த கேசவன் - ரேகாதேவியின் மகளான 28 வயது இந்திரா பிரியதர்ஷினி திருப்பூர் மடத்துக்குளத்தில் வேளாண்மை அலுவலராக பணியில் சேர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிலையில், குரூப் 1 தேர்வில் வென்று வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். வெற்றி பெற்ற மூவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்