ரயில் மோதி பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு - பெருங்களத்தூரில் நிகழ்ந்த சோக சம்பவம்
தாம்பரம் அருகே ரயில் மோதி பெண் வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த பெண். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் அமிர்தவல்லி என்பதும், அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்ததும் தெரிய வந்தது....