இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. அவற்றில் அரிய வகை பாசிகள், 3,600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. மேலும், ராமேஸ்வரத்தை சுற்றிலும் தனுஷ்கோடி, தேவிப்பட்டினம் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால், இங்கு சுற்றுலாவை மேம்படுத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, 3 மணி நேரத்திற்கு மிகாமல், 50 பேர் பயணம் செய்யும் வகையிலான பயணிகள் கப்பல் சேவையை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, கப்பல் சேவையை இயக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கடல் சார் வாரியம் அறிவித்துள்ளது.