திருச்செந்தூரில் தரிசன கட்டண விவகாரம் - மதுரை ஐகோர்ட் சரமாரி கேள்வி

Update: 2024-10-25 01:58 GMT

திருச்செந்தூரில் தரிசன கட்டண விவகாரம் - மதுரை ஐகோர்ட் சரமாரி கேள்வி

கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது கூட்டத்தை கட்டுப்படுத்த விரைவு தரிசனத்திற்கு நபருக்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க வேண்டும், ஆதார் அடிப்படையில் தரிசன நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்க வேண்டும் என மனுதாரர் கேட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, சுவாமி தரிசனத்திற்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் என வாங்கினால் ஏழை மக்கள் எவ்வாறு சுவாமி தரிசனம் செய்வார்கள்? என்று கேள்வி எழுப்பியது. கட்டணம் ஏன்? ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோவிலா? என சரமாரியாக கேள்வியை எழுப்பினர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள், வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்