பிரபல ரவுடிக்கு பக்கா ஸ்கெட்ச்.. இறங்கிய 3 ஸ்பெஷல் டீம்
சங்கரன்கோவில் அருகே, காவல் ஆணையர் அலுவலக ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பிரபல ரவுடியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியதுரை. கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த இவர், விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் வந்தபோது மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதில், அல்லித்துரை என்பவரை சின்ன கோவிலாங்குளம் போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், பிரபல ரவுடியான அருண் என்பவருக்கு இந்த கொலை சம்பவத்தில் தொடர்பிலிருப்பது தெரியவந்தது. இந்நிலையில், 3 தனிப்படைகள் அமைத்து பெரியதுரையை தேடி வரும் போலீசார், அவரை பிடிக்க முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.