தென்காசி நெற்கட்டும்செவல் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 309வது பிறந்தநாளை ஒட்டி தமிழக அரசு சார்பில் பூலித்தேவரின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கிஷோர், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார், எம்.எல்.ஏ ராஜா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்... பூலித்தேவர் சிலையை சென்னையில் நிறுவ வேண்டுமென அவரது வாரிசுதாரர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இது சம்பந்தமாக முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.