ரூ.300 கோடி மெகா மோசடி - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் தூத்துக்குடியில் பரபரப்பு

Update: 2024-07-21 14:01 GMT

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். இந்தநிலையில் தூத்துக்குடியில் நியோ மேக்ஸ் ஏஜெண்டாக செயல்பட்ட ஜூலி பாய், சுரேஷ் ஆகியோர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் ரூபாய் 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. அதில் சுரேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் ஜூலி பாய் தலைமறைவாக உள்ளார். இதனை தொடர்ந்து ஜூலி பாயை கைது செய்து பணத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்