நீட் ரத்து - "மன உளைச்சலில் உயிரிழப்புகள்" - கொதித்தெழுந்த அமைச்சர்

Update: 2024-06-23 16:26 GMT

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நீட் விலக்கே நம் இலக்கு என்று தெரிவித்துள்ள அவர் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் குழப்பங்கள் அரங்கேறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்த நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சர் ஒப்புக் கொண்டதுடன் தேசிய தேர்வு முகமை தலைவராக இருந்த சுபோத்குமாரை திடீரென மத்திய அரசு நீக்கி

நீட் தேர்வு குழப்பங்களையும், குளறுபடிகளையும் மெய்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்... முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைத்து சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழிக்கும் நிலையில் மத்திய அரசின் போக்கு உள்ளதாகக் குற்றம் சாட்டினார்... மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி பல்வேறு உயிரிழப்புகள் தொடர்ச்சியாக ஏற்படுகிறது என்று தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கண்டுகொள்ளாத மத்திய அரசின் மெத்தனப் போக்கால் இன்னும் எத்தனை குழப்பங்களும், குளறுபடிகளும் நடைபெறும் என்று கணிக்க முடியாத சூழலில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்