நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வரும் ஆகஸ்ட் 2, 3 ம் தேதி வல்வில் ஓரி விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி கொல்லிமலைக்கு செல்லும் பாதையை தூய்மைப்படுத்தும் பணி, மலை அடிவாரமான காரவள்ளியில் தொடங்கியது. இப்பணியினை மாவட்ட ஆட்சியர் உமா, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உமா, மஞ்ச பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.