திடீர் நெஞ்சு வலி - அரண்டு போன மருத்துவர்கள் - மட்டன்-ஆல் நேர்ந்த கதி

Update: 2024-05-15 13:52 GMT

தெலங்கானாவில் 66 வயது முதியவரின் உணவுக் குழாயில் சிக்கிய மட்டன் எலும்பை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றினர்... யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள கக்கிரேணி கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீராமுலு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மட்டன் சாப்பிடும் போது கவனக் குறைவாக 3.5 சென்டிமீட்டர் நீளமுள்ள எலும்பை அவர் விழுங்கியதன் விளைவாக ஒரு மாதத்திற்கும் மேலாக உணவுக்குழாயில் புண்கள் உட்பட கடுமையான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளார்... திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உணவுக் குழாயில் எலும்பு சிக்கி இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவர்கள் வெற்றிகரமாக எலும்புத் துண்டை அகற்றியுள்ளனர்... தற்போது அவர் நலமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்