பலியான மூதாட்டி.. களத்தில் இறங்கிய சுகாதாரத்துறை.. அதிர்ந்த காஞ்சிபுரம் | Kanchipuram
வையாவூர் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நேரத்தில் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மூதாட்டி உயிரிழந்த நிலையில், எஞ்சியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர், கிராமத்தில் முகாமிட்டு, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் பாஸ்கர், மற்றும் பம்ப் ஆப்ரேட்டர் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். குடிநீர் பிரச்சினையாக இருக்குமோ என வையாவூர் மக்கள் அச்சப்படுவதால், குடிநீரை மாதிரியை ஆய்வுக்கு அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.