மறுத்தும் எகிறும் சீனா..தொடர் சறுக்கலில் இந்திய சந்தை - இந்தியர்களை கட்டி இழுக்கும் சீன மொபைல்ஸ்..
இந்தியாவில் செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள்
உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தியுடன் தொடர்புடைய
மானியத் திட்டத்தை 2020 முதல் மத்திய அரசு அமல்படுத்தி
வருகிறது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யும் பன்னாட்டு
நிறுவனங்களுக்கு இதன் மூலம் மானியம் அளிக்கப்படுகிறது.
ஆனால் இத்திட்டத்தில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.
இதையும் மீறி, இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சீன
நிறுவனங்களின் பங்கு 2019இல் 72 சதவீதமாக இருந்து
2023இல் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது.