நடுக்கடலில் அசந்த மறு நொடி துண்டான கை.. கரைக்கு கொண்டு வரும் முன் நேர்ந்த பெரும் சோகம்

Update: 2024-09-18 16:19 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன் பிடித்த போது கடலில் தவறி விழுந்த மீனவர் படகு இயந்திரத்தில் அடிபட்டு உயிரிழந்தார். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு சென்று மீன்பிடித்த போது மாரியப்பன் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து படகு இஞ்சின் விசிறியில் அடிபட்டு அவரது கை துண்டானது. சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்த போது மாரியப்பன் உயிரிழந்தது தெரிய வந்தது. அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்