அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி கல்லூரி விவகாரம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-04-24 02:04 GMT

திருவண்ணாமலை மாவட்டம், மாத்தூரில், அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா தலைவராக உள்ள சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை பொறியியல் கல்லூரியின் உரிமத்தை, ரத்து செய்யக் கோரி, திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ். சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்படவில்லை என கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் ( AICTE) தான் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்