திடீரெனதீ குளிக்க முயன்ற முதியவர்... பரபரப்பான ஆட்சியர் அலுவலகம்

Update: 2024-08-19 15:13 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த ஒருவர், திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. நாமக்கல் அடுத்த மின்னாம்பள்ளி அருகே, அண்ணாநகரை சேர்ந்த செல்வராஜ், தனது வீட்டை சிலர் இடித்துவிட்டதாகக்கூறி, ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் மனு அளிக்க வந்தபோது, திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்த அலுவலர்கள் தடுத்து நிறுத்தி, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஆட்சியர் உமா, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்