தூத்துக்குடி, பனிமயமாதா பேராலயத்தில் ஏசு கிறிஸ்து போன்ற சிலை செய்யப்பட்டு, அந்த சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயத்திலும், சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்திலும், ஏசு சிலுவையை சுமக்கும் போது சந்தித்த கஷ்டங்களை தத்ரூபமாக நடித்து காட்டினர். இது ஏராளமானோருக்கு கண்ணீரை வரவழைத்தது. புதுச்சேரியில் தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் சிறப்பு சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் திருப்பலி நடைபெற்றது.