10 வெளிமாநில பெண்கள் - சென்னையில் இளைஞர் செய்த செயல் - ரகசிய தகவலால் வெளிவந்த உண்மை
சென்னை மடிப்பாக்கத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியிலுள்ள ஒரு மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் வடமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய அரும்பாக்கத்தை சேர்ந்த மைக்கேல் மோல்சம் என்பவரை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த 10 வெளிமாநில பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.