தமிழ்நாட்டில் களைகட்டிய ஆடி கடைசி வெள்ளி.. அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

Update: 2024-08-17 03:35 GMT

ஆடி மாத கடைசி வெள்ளியை ஒட்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அரியலூரில் உள்ள பல்வேறு மாரியம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். அலகு குத்துதல், தீப்பந்தம் எடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன்களும் செலுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள ஆதிபராசக்தி கோயிலுக்கு சுமார் இரண்டாயிரம் பெண்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து வந்து பால்குடம் எடுத்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சக்திபுரம் ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள் பீடத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் 41 அடி உயரம் உள்ள அம்மனுக்கு பாலாபிஷேகம், மலர் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பூக்குளி இறங்குதல் நிகழ்வும் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்