594\600 - சாதித்து அசத்திய - விவசாயி மகள்

Update: 2024-05-06 12:43 GMT

திண்டுக்கல் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த விவசாயி மகள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்... பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தன்யஸ்ரீ 594 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை மகேஷ்வரன் ஒரு விவசாயி... தாய் ப்ரீத்தா... கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் என 4 பாடங்களில் சதம் அடித்துள்ள தன்யஸ்ரீ தமிழில் 98 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மாணவி தன்யஸ்ரீக்கு பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்