தஞ்சை மாவட்டத்தில் உள்ள மகாமக குளக்கரையில் இருசக்கர வாகனத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் செய்து போலீஸிடம் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழும் நிலையில், கும்பகோணம் பகுதியில் நிகழ்ந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.