ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற குருநாதசாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கால்நடை சந்தை நடைபெற்றது. 3 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற இந்த சந்தையை காண ஏராளமானோர் வருகை தந்தனர். கால்நடை சந்தையில், 2 கும்பல்களை சேர்ந்த இளைஞர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால், அங்கிருந்த பொதுமக்கள் பதறியடித்து ஓடினர். மதுபோதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.