அய்யனார் கோயிலில் வெடித்த 4 சிலிண்டர் சிதறிய பத்து உயிர்கள்.. கருகிய 50 குடிசைகள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அய்யனார் கோயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன.
வெள்ளாலங்குளம் பூலுடையார் சாஸ்தா அய்யனார் கோயிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்றது. இதில், 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கோயில் முன்பு குடிசை அமைத்து கொண்டாடி வந்தனர். இந்நிலையில், திடீரென குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமடைந்தன. இதில் நான்கு சிலிண்டர் வெடித்ததில் நேர்த்திக்கடனுக்காக கொண்டு வரப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள், 20க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் அனைத்துமே தீயில் எரிந்து சேதமடைந்தன. நல்வாய்ப்பாக, மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.