போலீசை வெட்ட முயன்ற ரவுடி.. கடைசியில் மாவு கட்டு - "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.!"
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காவல் துறையினரை அரிவாளால் தாக்க முயற்சி செய்த ரவுடிகளை போலீசார் பிடிக்க முற்பட்ட பொழுது தப்பியோட முயன்று கீழே விழுந்ததில் காயமடைந்த ரவுடிகள் மாவுக்கட்டுடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்...
சிவலார்குளம் பகுதியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன், பெர்லின், மற்றும் நவீன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம் 29ம் தேதி ஆலங்குளம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர்களான தங்கதுரை மற்றும் ஜான்சன் ஆகியோர் ரோந்துப் பணியில் இருந்த போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் அண்ணனான கல்யாண சுந்தரம், அவரது நண்பர் நிர்மல் ஆகியோர் சேர்ந்து பணியிலிருந்த காவல் துறையினரிடம் பிரச்சனை செய்து, அவர்களை அரிவாளால் தாக்க முயற்சி செய்தும் காவலரின் இருசக்கர வாகனத்தை அரிவாளால் சேதப்படுத்தியும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், தேடப்பட்டு வந்த நிலையில் கல்யாணசுந்தரம் பிடிபட்டார்... அவரை போலீசார் சுற்றி வளைத்த போது தப்பி ஓட முயன்ற கல்யாண சுந்தரம் கீழே விழுந்து கையில் முறிவு ஏற்பட்டது... அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாவுக்கட்டுடன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்... தலைமறைவாக இருந்த நிர்மலும்
ஆலங்குளம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் அவருக்கும் காயம் ஏற்பட்டு கையில் மாவு கட்டு போடப்பட்டது.