"உங்க பையனுக்கு ஸ்காலர்ஷிப் தரோம்.." -QR- ஐ ஸ்கேன் சொல்லி வந்த போன் கால்..
+2 மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குவதாக கூறி
பெற்றோர்களை குறிவைத்து மோசடி நடப்பதாக சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த செல்வம் என்பவரை தொலைபேசியில் அழைத்த நபர்கள், அவருடைய மகனுக்கு ஸ்காலர்ஷிப் வந்திருப்பதாக கூறிய நிலையில், வாட்ஸ் அப்பில் க்யூ ஆர் கோடு ஒன்றை அனுப்பி ஸ்கேன் செய்யும்படி கூறியுள்ளனர். அதனை செல்வம் ஸ்கேன் செய்த போது அவரது வங்கி கணக்கில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்து செல்வம் இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகாரளித்த நிலையில், மோசடி குறித்தான செல்போன் ஆடியோ வெளியாகி பரவி வருகிறது.