மனமகிழ்மன்றம் தரமாக உள்ளதா? FL2 பாரில் திடீர் ஆய்வு.. சிதறிய மதுபிரியர்கள்

Update: 2024-08-30 15:17 GMT

புதுக்கோட்டையில் மன மகிழ் மன்றம் என்ற பெயரில், அரசு உரிமம் பெற்று நடத்தப்படும் பார் ஒன்றில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

எஃப் எல் டு பார் அதாவது மன மகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாருக்கு டாஸ்மாக் மது விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உரிமம் வழங்கியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகரத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட எஃப் எல் டு பார்கள் உள்ளன. எஃப் எல் டூ பாரில் மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்களுக்கு மட்டும் மது விற்பனை மற்றும் மது அருந்த அனுமதிக்க வேண்டும் என்பது விதிமுறை. அந்த விதிமுறை சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் வருவாய் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முறையாக கணக்கு வைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றியும், உறுப்பினர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அங்கு மது பிரியர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்