சொந்த பந்தங்களுடன் நிலாச்சோறு .. அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே.. மீண்டும் மனதில் ஸ்வீட் memories..

Update: 2024-04-25 07:14 GMT

தந்தை வழி சொந்தங்கள், தாய் வழி சொந்தங்களை அறியாமல் வளரும் 2கே கிட்ஸ், செல்போனிலேயே மூழ்கி இருப்பதால் அண்ணன், தம்பி, மாமன், மைத்துனர் உறவுகள் தெரியாமலே வளர்கிறார்கள். திருவிழாக்களிலும்கூட அதிகமாக தலைகாட்ட விரும்புவதில்லை.. இதனாலே, சொந்தபந்தங்கள் யார் என்று தெரியாமல் போய்விடுகிறது. இதற்கு தீர்வாக....

சொந்தபந்த உறவுகளை இணைக்ககூடிய திருவிழாவாக, ஆண்டுதோறும் மானாமதுரையில் நிலாச்சோறு விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து வாகனங்களில் சாரைசாரையாக வரும் மக்கள், மானாமதுரை வைகை ஆற்றுக்குள் தாங்கள் கொண்டுவந்த சிக்கன், மட்டன், மீன், இறால் என சைவ, அசைவ உணவுகளை நிலவு வெளிச்சத்தில் குடும்பத்தினருடன் உணவு பரிமாறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் உறவினர்கள், நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மனக் கவலைகளை மறந்து உற்சாகமாக பேரக் குழந்தைக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்