தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சித்திரை தமிழ்புத்தாண்டு ஆரோக்கியம், வெற்றி, மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையட்டும் என்றும், புதிய உத்வேகம், ஆற்றல் மற்றும் உற்சாகத்துடன் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.