அரசு பேருந்தில் முன்பதிவு செல்லும் பயணிகளுக்கு அமைச்சர் கொடுக்க போகும் சர்ப்ரைஸ்

Update: 2024-02-02 02:06 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளில் மூன்று பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களை தவிர்த்து சாதாரண நாள்களில், அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பதை ஊக்குவிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, ஜனவரி மாதத்தில் அவ்வாறு பயணித்த மூன்று பயணிகளை கணினி குலுக்கல் முறையில் அமைச்சர் சிவசங்கர் தேர்வு செய்தார். அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்