நாட்டின் 75வது குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு மகாராஷ்டிரா ஒடிசா மிசோரம் மணிப்பூர் அருணாச்சல் உட்பட 16 மாநிலங்களின் அலங்கார உறுதிகள் இடம் பெற்றன. இதில் சிறப்பான கருத்துக்கள் மற்றும் காட்சிகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதன்படி, வளர்ச்சி அடைந்த இந்தியாவில் பெண்கள் அதிகாரம் என்ற கருப்பொருளில் வடிவமைக்கப்பட்டிருந்த ஒடிசா மாநில அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. சுற்றுலாவை வலியுறுத்தும் தோர்தோ என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்த குஜராத் மாநில ஊர்திக்கு இரண்டாவது பரிசு கொடுக்கப்பட்டது. தமிழகத்தின் பண்டைய கால சோழர் காலத்தில் குடவோலை முறையை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியல் பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போன்று, அணிவகுப்பில் இடம்பெற்று இருந்த படைகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.