திருமணத்திற்குப் பிறகு முஸ்லிம் மதத்திற்கு மாறிய தீபாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இப்ராஹிமின் பெற்றோர், அண்ணன் குடும்பத்தினர் அனைவரும் ஓரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற இப்ராஹிம், தனது அண்ணன் கட்டுப்பாட்டில் இருந்ததால் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று மனைவி தீபா வலியுறுத்தி வந்தார். ஆனால், கணவரின் குடும்பத்தார் மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த தீபா கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக்கொண்டு தனது பெற்றோருக்கு வீடியோ அனுப்பி விட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தீபாவின் 2 பிள்ளைகளின் வாழ்க்கைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறிய உறவினர்கள், உடலை பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.