"2வது முறையாக நீட் எழுதி சீட் கிடைச்சிருக்கு" மாணவர்கள் நெகிழ்ச்சி

Update: 2023-07-28 02:59 GMT

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீட்டில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டிற்கான MBBS மற்றும் BDS படிப்பிற்கான ஆணைகள் வழங்கும் விழா, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்துகொண்டு 7.5% உள் இடஒதுக்கீட்டில் இடம்பெற்ற மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். அதோடு, MD, MS உள்ளிட்ட முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கும் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்